• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாக்களிக்க சென்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உயிரிழப்பு

April 18, 2019 தண்டோரா குழு

கோவையில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் கோவை காந்தி மாநகர் வின்சென்ட் பள்ளியில் வாக்கு அளிக்க ஒய்வு பெற்ற அரசு அதிகாரியான பாலகிருஷ்ணன் என்பவர் இன்று காலை 9 மணியளவில் சென்றுள்ளார்.

வாக்கு சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, ஏற்கனவே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க