• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓட்டளிக்க சென்றவருக்கு சர்க்கார் பட பாணியில் நடந்த சம்பவம்

April 18, 2019 தண்டோரா குழு

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இளைஞரின் ஓட்டு வேறு நபர் போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெங்கலூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஓட்டு போடுவதற்காக, இன்று காலை ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். மதியம் 2 மணிக்கு ஒட்டு போட பீளமேடு பி.எஸ்.ஜி. தொடக்க பள்ளிக்கு சென்று ஆதார் அட்டை மற்றும் பூத் சிலிப்பை காட்டியுள்ளார்.

தேர்தல் முகவர்கள் ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வாக்களிக்க அனுமதி அளித்துள்ளனர். விரலில் மையும் வைக்கப்பட்டு இயந்திரத்தில் பட்டனையும் அளுத்தியுள்ளார். அதன் பின் அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த வாக்கை ஏற்க மறுத்துவிட்டனர். அதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் முகவர்களுடன் வாக்குவாதம் செய்து, ஓட்டு போட்டே தீருவன் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்,49P தேர்தல் நடத்தை விதிகள், 1961 படி tender vote அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க