• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது சரியே – சென்னை உயர்நீதிமன்றம்

April 17, 2019 தண்டோரா குழு

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரம் குடியாத்தம், ஆம்பூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்களைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும் வேட்பாளர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும். வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு. அந்த முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது என தெரிவித்தது.அப்போது,ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

மேலும்,இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் பேசுகையில், தேர்தலை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு. குடியரசு தலைவரின் முடிவல்ல. அவர் ஒப்புதல் மட்டுமே வழங்கினார். வேலூரில் கதிர் ஆனந்த் வீட்டில் பணம் கைபற்றப்படுவதற்கு முன்னரே ஏராளமான வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.
பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில்,மாலையில் இந்த வழக்கில்
தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்தது சரியே என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மேலும், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க