• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

April 16, 2019 தண்டோரா குழு

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏப்.,18 அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் மே 23ல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டின் படி வேலூரில் அதிமுக-திமுக கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. அதிமுக சார்பில் ஏ.சி.ஷண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து இருகட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.11.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. எனினும் வருமான வரித்துறை இதனை மறுத்தது. இந்நிலையில், கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க