• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

April 16, 2019 தண்டோரா குழு

கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி , கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் , TRSSA, FRSI, ASSA, RARS ஆகிய ஸ்கேட்டிங் அகடாமிகளை சார்ந்த பயிற்சியாளர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

இப்பேரணி கோவை பந்தயச்சாலையில் நடைபெற்றது. இப்பேரணியை பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் “100% வாக்களிப்போம்” “வாக்குரிமை நமது உரிமை ” “வாக்களிப்பது நமது கடமை” வாக்களிப்போம் ஜனநாயகம் காத்திடுவோம் ” போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும், முழக்கங்களை இட்டவாரும் பந்தயச்சாலையை சுற்றி வந்தனர்.

இறுதியில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுத்து வலியுறுத்தினர்.

மேலும் படிக்க