• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறப்பு

April 16, 2019 தண்டோரா குழு

கோவை கெம்பட்டி காலனியைச்சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கார்த்தி என்கிற தேங்காய்பால் கார்த்தி (36 ). கார்த்தி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வந்ததாக
தெரிகிறது.

இந்நிலையில் கடை வீதி காவல் நிலையத்தினர் கார்த்தி மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்து கைதியை நேற்றிரவு 9.15 மணியளவில் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்செல்ல இருந்தபோது, திடீரென கார்த்தி மயங்கி விழுந்து இறந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது கார்த்தி இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். கைதி வலிப்பு வந்து இறந்துள்ளாரா அல்லது சயனைடு சாப்பிட்டு இறந்தாரா என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பிறகே தெரிய வரும். காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்ததால், இச்சம்பவம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க