• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு, வீடு, மாடு காக்க பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் – கோவையில் இல.கணேசன் பேச்சு

April 16, 2019 தண்டோரா குழு

நாடு, வீடு, மாடு காக்க பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என கோவையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் என தெரிவித்துள்ளார்.

கோவை செட்டி வீதி பகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.இராதாகிருஷ்ணனை ஆதரித்து இறுதி கட்ட வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தலில் எந்த கட்சியும் விலைவாசி குறித்த பேசவில்லை. அந்த அளவிற்கு விலைவாசிகள் பாஜக ஆட்சியில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. நாடு, வீடு, மாடு காக்க மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தமிழர்களின் காட்டு மிராண்டிதனமான விளையாட்டு என விமர்சித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பாஜக வெற்றி பெறும். சுப்ரமணியசுவாமி ஒரு சுதந்திரமானவர் என்பதால் அவர் டிடிவி தினகரன், சசிகலாவிற்கு ஆதரவாக டிவீட் செய்துள்ளதாக கூறிய அவர் அது அவரது சொந்த கருத்து எனவும் அக்கருத்து பாஜகவை ஒருபோதும் பாதிக்காது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க