• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேனியில் பொதுக்கூட்டத்தில் மோடி காலில் விழுந்து ஆசிபெற்ற ஓபிஎஸ் மகன்

April 13, 2019 தண்டோரா குழு

தேனியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து பிரதமர் மோடியுடன் துணை முதல்வர் ஓபிஎஸ்யின் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்காகப் பரப்புரை மேற்கொள்ளத் தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக வந்த பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா எனக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பிரதமர் வரவேற்று தமிழக முதல்வரும் , துணை முதல்வரும் உரையாற்றினர் பின்னர் மோடி பேசுவதற்காக எழுந்த போது துணை முதல்வர் பன்னீர்செல்வதின் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் மலர்செண்டு கொடுத்து வரவேற்றார், பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியின் காலில் விழுந்தார், அவரை தடுத்து நிறுத்திய மோடி ரவீந்திரநாத்தை பார்த்து புன்னகைத்தார்.

மேலும் படிக்க