• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து – முதல்வர் பழனிச்சாமி

April 13, 2019 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து மடலில்

திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழனென்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா!

தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு அவர் வெளியிட்ட வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க