• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம் – சினிமா பிரபலங்கள் இரங்கல்

April 13, 2019 தண்டோரா குழு

நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை துறையினரை செந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ்க்கு ராமநாதபுரத்தில் வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே ஜே.கே.ரித்தீஷ் உயிர் பிரிந்துவிட்டது. ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷால்

ஜே.கே ரித்திஷ் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது; ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன்.

நடிகை குஷ்பூ

நடிகர் ஜே.கே.ரித்திஷின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது; 2 நாட்களுக்கு முன் தான் அவரை சந்தித்தேன் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் நாசர்

ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு நல்ல தம்பியை நான் இழந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆர்கே பாலாஜி

நடிகர் ஜே.கே.ரித்திஷின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது, ஜே.கே.ரித்திஷின் மரணம் என்னால் நம்ப முடியவில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன்

நண்பர் ஜேகே ரித்தீஸ்…. கேள்விப்பட்ட செய்தி இதயத்தை நொறுக்குகிறது… நீ உன்கூட இருந்தவுங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த பணத்துக்கே இன்னும் 50 வருஷம் உயிரோட இருக்கனுமே… உன் தர்மம் கூட உன்னை காப்பாத்தலையே…. வருந்துகிறேன்… குறைந்தநாள் பழக்கம்தான்.. ஆனாலும் தாங்கமுடியவில்லை.

இயக்குனர் பாரதிராஜா

ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன்.

மேலும் படிக்க