• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

April 12, 2019 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலையில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் கணக்கில் இல்லாத பணங்கள் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர் .

ஜீரோ கிராவிட்டி நிறுவனமானது திருமணம், கலை நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. இதில் கோவை முக்கிய கிளையாக செயல்பட்டு வருகிறது.மேலும் கோவை திருச்சி சாலை கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் அருகே உள்ள இந்த நிறுவனத்திற்கு நேற்று மாலை 8 மணி அளவில் வருமானவரித்துறையினர் புகாரின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட வந்தனர்.

அப்போது உரிமையாளர் இல்லாததால் ஊழியர்களுக்கு அறிவிப்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஊழியர்களும் சரியான தகவல்கள் கொடுக்காமல் வீட்டிற்கு சென்று விட்டதை அடுத்து காவல்துறையினர் சோதனை நடத்துவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர் வந்தவுடன் வருமானவரித்துறையினர் தொடர் சோதனை மூலம் புகாரில் வந்ததுபோல கணக்கில் இல்லாத பணங்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க