• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணம் வழங்க முயன்ற அமமுகவினரை பிடித்த பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர்

April 11, 2019 தண்டோரா குழு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பணம் வழங்க முயன்ற அமமுக கட்சியினர் 4 பேரை பிடித்து பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட தென்றல் நகர், ராஜேந்திரா நகர், ஸ்ரீராம் நகர், பழையூர் உள்ளிட்ட பகுதியில் அமமுக கட்சியினர் 4 பேர் வீடு வீடாகச் சென்று வீட்டில் உள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், வரிசை எண், வீட்டில் உள்ளவர்களின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, செல் நம்பர் ஆகியவற்றை நோட்டில் எழுதி வரும் 16ம் தேதி உங்கள் வீட்டிற்கு பரிசுப்பெட்டி வரும் வந்தவுடன் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கூறிச் செல்வதாக அப்பகுதி பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர் அங்கு சென்று
அமமுக கட்சியினரை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் செல் நம்பர்களை பெற்றுக் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் தாங்கள் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதே போல் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் இதேபோல் அமமுகவினர் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரித்ததாக புகார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க