• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- உயர்நீதிமன்றத்தில் சிபிஐடி அறிக்கை தாக்கல்

April 10, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. எனினும் தற்போது வரை சிபிசிஐடி போலீசாரே இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சீலிட்ட உறையில் உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும்,சிபிஐ விசாரிப்பது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணை தங்களுக்கு வரவில்லை என சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய அரசாணையை மனுதாரர் தரப்புக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவ்வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க