• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பி இருவர் கைது

April 10, 2019 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பி இடையூறு செய்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் மற்றொருவரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ஆத்துப்பாலம் அருகே கன்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். மக்கள் நீதி மைய பொறுப்பாளர் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக செயல்பட்டவர் என கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் இன்று காலை மக்கள் நீதிமய்ய உறுப்பினர் முகமது சாஜீத்தை அவரது வீட்டில் இருந்து கைது செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.அதேபோல போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கானையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து மக்கள் நீதி மைய உறுப்பினர் சாஜித்தை போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் அரசு அனுமதித்து பின்னர் சிகிச்சை அளித்தனர்.இதையடுத்து போலீசார் இருவரையும் கோவை 7 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டியன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.இவரை வருகின்ற 23 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிபதி குடியிருப்பு முன்பாக மக்கள் நீதி மையத்தின் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க