• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா? – ரஜினி பதில்

April 9, 2019 தண்டோரா குழு

நதிகள் இணைப்பு என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தேர்தல் அறிக்கை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்து இல்லம் அருகே
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலைகிடைக்கும்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே இதை நான் வலியுறுத்தினேன்.
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது,என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என கூறினார்.

மேலும் படிக்க