• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் பறக்கும் படையால் ரூ.1862.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – இந்திய தேர்தல் ஆணையம்

April 8, 2019 தண்டோரா குழு

இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ 1862.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.

இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையானரால் இந்தியா முழுவதும நடத்திய சோதனையில் இதுவரை ரூ 1862.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிபிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நடத்திய சோதனையில் மட்டும் இதுவரை 401.46 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க