• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

April 6, 2019 தண்டோரா குழு

கோவை சூலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவை தேர்தலை ஒட்டி பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் உரிய அனுமதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செல்லப்படும் பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஜிஎஸ்டி ஆய்வாளர் மலர்விழி தலைமையில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனையிட்டதில் இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்மிற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த பணம் கோவையில் இருந்து பல்லடத்தில் உள்ள இரண்டு ஏடிஎம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க