• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை வாட்ஸ்அப் குழுவில் இணைக்க முடியாது!

April 4, 2019 தண்டோரா குழு

விருப்பமில்லாத வாட்ஸ்அப் குரூப்களில் ஒருவர் இணைக்கப்படுவதை தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் அதிகம் மக்களால் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலியில் வாட்ஸ் அப் முதலிடத்தில் உள்ளது. இதற்கு ஏற்ப அந்நிறுவனமும் பயனாளர்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது விருப்பமில்லாத வாட்ஸ்அப் குரூப்களில் ஒருவர் இணைக்கப்படுவதை தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

யார் ஒருவர் வாட்ஸ்அப் குரூப்களில் இணைக்கலாம் என்பதை முன் கூட்டியே தேர்வுசெய்துகொள்ள முடியும்.முதலில் அக்கவுண்ட் >பிரைவசி >குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று ஆப்ஷனில் (Nobody, My Contacts or Everyone) ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம். உதாரணமாக Nobody என்கிற ஆப்ஷனை தேர்வுசெய்தால், குழுவில் இணைக்கப்படும் நபருக்கு இன்வைட் மெசேஜ் வரும். அவருக்கு குரூப்பில் இணைய விருப்பம் இருந்தால் அந்த மெசேஜைப் பார்த்து, இணைந்துகொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்துவிடலாம். ஆனால் அந்த இன்வைட் மெசேஜ், மூன்று நாள்களில் காலாவதி ஆகிவிடும்.

அடுத்தாக My contacts என்கிற ஆப்ஷனை தேர்வுசெய்தால் மொபைலில் எண்ணைப் பதிவுசெய்து (contacts) வைத்திருக்கும் நபர்கள் மட்டும் அனுமதி இன்றி குரூப்களில் இணைக்க இயலும். மேலும், Everyone என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், யார் வேண்டுமானாலும் குரூப்களில் இணைக்க முடியும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் செயலிக்கு இப்போது இந்த வசதி கொடுக்கப்பட்டுவருகிறது. தற்போது ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள இந்த வசதி இன்னும் சில நாட்களில் அனைவர்க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க