• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தும் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து

April 4, 2019 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தும் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்யப்போகும் தொகுதியில் அவர்களுக்காக சிறப்பு வாகனங்களை முன்கூட்டியே கொண்டு செல்வது வழக்கம்.

இதற்கிடையில், நீலகிரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்றிருந்தார். இதற்காக சென்னையிலிருந்து, ஊட்டிக்கு நேற்று இரவு 9 மணிக்கு சிறப்பு பிரச்சார வாகனம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு, இன்று காலை கூடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், ஊட்டியிலிருந்து, கூடலூர் செல்லும் பாதை மிகவும் சரிவான என்பதால் ஊட்டி- கூடலூர் நடுவே, நடுவட்டம் என்ற பகுதியில் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது, தலைகுப்புற கவிழ்ந்தது.வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடன் ஒரு உதவியாளர் இருந்துள்ளார். இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய வேண்டிய வாகனம் கவிந்து விபத்திற்குள்ளானதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க