• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ராஜவீதியில் 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

April 2, 2019 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் தனியார் நகை கடைக்கு சொந்தமான 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பரிசோதனை செய்தபோது 1 கிலோ அளவிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியபோது கீர்த்தலால் காளிதாஸ் நகைக்கடைக்கு சொந்தமானது என தெரிவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் நகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒட்டுனர் வீரய்யன் மற்றும் கடை ஊழியர் நித்தின் ஆகியோரை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் அழைத்து வந்தனர்.

மேலும் 979 கிராம் நகைள் இருந்ததும் , நகை செய்யும் இடத்தில் இருந்து நகைகள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர், ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாச்சியர் அலுவலர் தனபாலன் ஒப்படைத்தனர். அதன்பின்னர் வருமானவரி துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க