• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லிக் கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன் – ரஜினி புகழாஞ்சலி

April 2, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய வெகுசில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மகேந்திரன். தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர். ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், உதிரிபூக்கள் உள்ளிட்ட பல படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படங்களாகும். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இதையடுத்து, சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்
மகேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மிக மிக நெருங்கிய நண்பர், எங்களுடைய நட்பு சினிமாவை தாண்டி இருந்தது. ரொம்ப ஆழமான நட்பு.எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்று எனக்கே காட்டியவர். நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். ‘முள்ளும் மலரும்’ படம் பார்த்துவிட்டு, என்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலசந்தர், ‘உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்’ என்று கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் மகேந்திரன். அண்மையில் பேட்ட படத்தில் சேர்ந்து பணியாற்றும்போது சூட்டிங்கில் நிறைய பேசிக்கொண்டோம். இப்போ இருக்க சமுதாயத்தின் மேலேயும், சினிமா மேலேயும் அரசியல் மேலேயும் அவர் கொண்டிருந்த அதிருப்தி கோவம் எல்லாத்தையும் என்னிடம் வெளிப்படுத்தினார்.

அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்றால், அவர் எக்காரணத்தை கொண்டும் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி மத்தவங்களுக்காகக் சுயமரியாதையை சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காத மனிதனர். இப்பொழுது வரும் இயக்குனர்களுக்கு கூட அவர் முன்மாதிரியாக இருக்கிறார். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு. அவர் குடுப்பதாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.

மேலும் படிக்க