• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாருக்கு நீதிமன்ற காவலில் வைப்பு

April 1, 2019 தண்டோரா குழு

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 26ம் தேதி வீட்டிற்கு அருகே, உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கோவை எஸ்.பி உத்தரவின்பேரில், 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த அன்று, சிறுமியின் வீட்டின் அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தவன் என்பதும், சிறுமியின் சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த டீ சர்ட், அவனுடையது தான் என்றும், தனிப்படை போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் சந்தோஷ் குமார் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க