• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : கோவை எஸ்பி இடமாற்றம், புதிய எஸ்பி நியமனம்

April 1, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளியிட்டதாக கோவை மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
அதைபோல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய உயர்நீதிமன்ற கிளை அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் எஸ்பி மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கோவை மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சுஜித்குமார், கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும், உதகை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் பொள்ளாச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வெங்கட்ராமன் பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்,பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயராம், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் நடேசன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க