• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமிக்கு எழுதப்பட்ட கண்கலங்க வைக்கும் கடிதம்

March 30, 2019

கோவை கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன 5 வயது பள்ளி சிறுமி கைகளால் கட்டப்பட்ட நிலையில்  உடலில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.  பின்னர் உடற்கூறு ஆய்வு  ஆய்வில் சிறுமி பல்வேறு சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த சிறுமிக்காக எழுதப்பட்ட உருக்கமான கடிதம் ஒன்று சிறுமியின் வீட்டருகே ஒட்டப்பட்டுள்ளது.  இந்த கடிதம் அந்த சிறுமிக்கு எழுதியது போல் உள்ளது.

அந்த கடிதத்தில்
நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

இது கையாளாகாத அரசுகள் ஆளும் நாடு…

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

உடற்கூறு ஆய்வும் செய்யும் வயதா உனக்கு?

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

ஆண்பால் எது… பெண் பால் எது என்று தெரியாத உனக்குப் பாலியல் வன்புணர்வா?

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு…

உன்னைத் தொடும்போது அவனுக்குத் தெரியவில்லையா நீ மகள் என்று.. நீ தங்கை என்று…?

இங்கு ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் செய்ய ஓராயிரம் சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்மார்கள் இருக்கிறோம் என்று நீ உறங்கு…

இறைவனுக்கு மட்டும் தலைகுனிந்த இந்தத் தலை வெட்கித் தலைகுனிகிறோம்.. கையாளாகாத சட்டத்தின்கீழ் வாழ்வதை எண்ணி..

நீ உறங்குடா மகளே… நீ உறங்கு . . .

இந்த கடிதம் படிபவர்களை கண்கலங்க வைக்கும் படி உள்ளது

மேலும் படிக்க