• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது

March 30, 2019 தண்டோரா குழு

கோவையில் தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் கைது செய்ய்பட்டுள்ளார்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், தனது தாயின் சிகிச்சைக்காக,அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகில் கவுதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பணியிலிருந்த சிறுநீரக சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம் (வயது 65), உடல்நிலை சரியில்லாத தாய்க்கு சிகிச்சை அளிப்பதை விடுத்து மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த இந்த இடத்தில் தானே வலி உள்ளது என்று கேட்டு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், கோவை மத்திய பகுதியிலுள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க