• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வருகை!

March 30, 2019 தண்டோரா குழு

தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில். கூடவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே இதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள்
முழுவீச்சில் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படியும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடந்து தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க