• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும்; சந்திக்க தயார்; நான் கலைஞரின் பேரன்! –

March 30, 2019

உதயநிதி பொள்ளாச்சி சம்வவத்திற்கு எதிராக பேசியதால் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அதைச் சந்திக்கத் தயார் ஏனெனில் நான் கலைஞரின் பேரன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் திமுகவிற்கு அதிரவாக ஈடுபட்டு களம் காணும் திமுக தலைவர் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக தேர்தல் களத்தில் தீவிரமாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில்
ஈடுபட்டுவருகிறார். இவ்வேளையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரத்தில் ஈடுபடிருந்தார் அப்போது பேசிய அவர், ” பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். ‘இல்லை’ என்று சிலர் குரல் எழுப்பினர். ”பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியுமா?” என்றார். ‘மறக்க முடியாது’ என்று குரல்கள் எழுந்தன. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன். ஜெயராமன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அதைச் சந்திக்கத் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க