• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை – தமிழக தேர்தல் அதிகாரி

March 30, 2019 தண்டோரா குழு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுனர். அப்போது, துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இருந்தனர்.

இந்நிலையில்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 புகார்கள் வந்துள்ளன. அதில் 37 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது எனக் கூறினார்.

மேலும் படிக்க