• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை-படக்குழு விளக்கம்

March 30, 2019

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கும் இப்படத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் ஏப்ரல் மாதம் 12 அன்று வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால் பா.ஜனதாவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று கூறி, படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இது குறித்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள்.

அப்போது, மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க