• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

March 29, 2019 தண்டோரா குழு

தஞ்சை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுகப்பட்டுள்ளது.தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன், தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தேர்தல் ஆணையத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி என்பதால் சைக்கிள் சின்னத்தை அக்கட்சி இழந்தது.

இந்நிலையில், தஞ்சை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க