• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரன் கைது

March 28, 2019 தண்டோரா குழு

சூலூர் அருகே திமுக அலுவலகத்தில் இருந்த திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரன் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சந்திரன் இருகூரைச் சேர்ந்தவர் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் மத்திய அமைச்சர் உடைய சம்மந்தியும் ஆவார்.

இன்று மாலை சுமார் 8 மணியளவில் சூலூர் திமுகவின் அலுவலகத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் வைத்து சந்திரனை கைது செய்தனர். கடந்த எட்டாம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக நேர்காணலுக்கு சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில் ரயிலில் பயணம் செய்யும்போது அதே பெட்டியில் பயணம் செய்த பெண்களின் மீது கால் தவறுதலாக பட்டதாக தெரிகிறது . அந்த பெண்கள் கூச்சலிடவே அதே பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். அப்போது இந்த சம்பவம் சம்பந்தமாக சந்திரன் மற்றும் சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை வந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக கூறி சேலம் ரயில்வே போலீசார் சூலூர் வந்து திமுக செயற்குழு உறுப்பினர் ஆர் சந்திரனை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தேர்தல் தற்போது பிரச்சாரம் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு திமுக செயற்குழு உறுப்பினர் கைது செய்தது திமுகவினரிடையே பெரும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சுல்தான்பேட்டை சேர்ந்த திமுகவின் முக்கிய நபர் வேலுச்சாமி கூறும்போது இது பொய் புகார் எனவும் அரசியல் சதி எனவும் கூறினார்.

மேலும் படிக்க