• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய தேர்தலுக்கு முன்பாக தாக்குதல் நடத்தலாம்! – பாகிஸ்தான் பிரதமர்

March 27, 2019 தண்டோரா குழு

இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப் 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் இந்த கொடுரா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா விமானப்படை நடத்திய பதில் தாக்குதளில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாக இந்திய தரப்பு அறிவித்துள்ளன. இதனால் இரு நாட்டின் நல்உறவில் விரிசல் ஏற்ப்பட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது.இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனத்தில் வெளியான செய்தியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக வெளியான அந்த செய்தியில் :” நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை, இந்தியாவில் தேர்தலை முடியும் வரை நம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடியின் அரசு நம்மீது தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து விதங்களிலும் நாம் தயாராக இருக்கிறோம்” என இவ்வாறு இம்ரான் கான் கூறியுள்ளதாக வெளியான அந்த செய்திக் குறிப்பில் குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க