• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

March 27, 2019 தண்டோரா குழு

குற்றவாளிகளை வீடியோ கான்பிரன்சிங் முறையில் காட்டுமாறு பெற்றோர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விசாரணையில் உள்ள நபரை போலீசார் காண்பித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை, கஸ்தூரி நாயக்கன் புதூரில் 5 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்துள்ள பெற்றோரான கனபிரதீப், வனிதா தம்பதிகள் இன்று அகில இந்திய மாதர் சங்கத்தினருடன் வந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடமும் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடமும் மனு ஒன்றை அளித்தனர். அதில் தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்பதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,

தங்கள் வீட்டின் அருகில் குடியிருந்து வரும் விஜயகுமார், துரைராஜ், சந்தோஷ்குமார், வசந்தகுமார் உள்ளிட்ட நால்வர் மீது சந்தேகம் இருப்பதால் அவர்களை விசாரிக்க வேண்டும் என வலியுறித்தினர். மேலும் உரிய நீதி கிடைக்கும் வரை தனது குழந்தையின் உடலை வாங்க போவதில்லை எனவும் தாய் வனித உறுதிபட தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாதர் சங்கத்தினர், உண்மை குற்றவாளிகளை கண்டறிவதோடு, சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரன நிதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி,

சிறுமி மிகக்கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற ஒரு சம்பவத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் பேசியுள்ளேன். காவல்துறை உரிய விசாரணை நடத்தி வருவதால் மேல்விசாரணை அவசியமில்லை என தெரிவித்தார். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குழந்தைகள் நலனுக்கு குரல் கொடுக்கும் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும் என்றார்.

இதனிடையே உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துடியலூர் சந்திப்பில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது குற்றவாளிகளை வீடியோ கான்பிரன்சிங் முறையில் காட்டுமாறு பெற்றோர் தரப்பில் விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று விசாரணையில் உள்ள நபரை போலீசார் காண்பித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கின் தீவிரம் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில் கோவை மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் கோவை மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க