• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்வணாமாக விமானத்தில் பயணிக்க முயற்சித்த நபர் – பயணிகள் அதிர்ச்சி

March 26, 2019

விமான பயணங்களில் போது வித்தியாசமான விஷியங்கள் நடப்பது இப்போது அரிதாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணத்தின் போது பெண் ஒருவர் தனது தன் குழந்தையை விமான நிலைய காத்திருப்பு அறையிலேயே மறந்து விட்டு சென்ற சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு விசித்திர சம்பவம் ஒன்று ரஷ்யாவில் டோமோடிடோவோ விமான நிலையில் நடந்ததுள்ளது. இந்த விமான நிலையத்தில் விமானம் ஏற வந்த பயணி ஒருவர் ஆடையில்லாமல் நிர்வணாமாக விமானத்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்பொழுது அவர் “ஆடையில்லாமல் பயணம் செய்தால் தான் வேகமாக பயணிக்க முடியும். ஆடைகள் அணிந்திருந்தால் அது ஏரோடைனமிக்ஸை பாதிக்கும் அதனால் தான் நான் எதுவும் அணியவில்லை என்னை விட்டு விடுங்கள்” என கத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிருந்துள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க