• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – டிடிவி தினகரன்

March 26, 2019 தண்டோரா குழு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச் சின்னம் கிடைக்கும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் சின்னம் விவாகரம் குறித்து செய்தியாளர்களை பேட்டியளித்த டிடிவி தினகரன்,

நாளை முதல் ராயபுரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். குக்கர் சின்னர் கிடைக்கவில்லை என்றாலும் 59 வேட்பாளர்களுக்கு வெவ்வேறு சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மேலும் எங்களுக்கு கொடுக்கப்படும் சின்னம் ஏதுவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அதை கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க