• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மக்களைவை தேர்தலில் போட்டியிட இதுவரை 1000 பேர் வேட்புமனு

March 26, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் இதுவரை 1000 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கடந்த 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 18-ல் துவங்கியது. தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்திருந்தது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் இதுவரை 1000 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்; ஆண்கள் – 878, பெண்கள் – 120, 3-ம் பாலினத்தவர் 2 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் பற்றி நாளை பரிசீலனை செய்யப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மார்ச் 29ந்தேதி வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க