• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் கோவையில் வேட்புமனு தாக்கல்

March 25, 2019 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,

நாளை முதல் பரப்புரையை துவக்குகிறோம். ஒரு மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நேற்றைய பொதுக்கூட்டம் அதை உறுதிபடுத்தியுள்ளதாக்கியுள்ளது. கோவை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம் என்றார். அப்போது, மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கமல்ஹாசன் கூறிய புகார் குறித்த கேள்விக்கு, இதுவரை புகார் அளிக்கவில்லை எனவும் இனிமேலும் தொடர்ந்தால் புகார் அளிப்போம் என கூறினார். இவரை தொடர்ந்து பொள்ளாச்சி மநீம வேட்பாளர் முகாம்பிகை ரத்னம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர் , பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் , பொள்ளாச்சியில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் , இதற்கு எதிராக வலுவான குரல் எழுப்போம் என கூறினார்.

மேலும் படிக்க