• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு – ராதா ரவி வருத்தம்

March 25, 2019 தண்டோரா குழு

லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான ‘கொலையுதிர் காலம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்த சர்ச்சையான கருத்தை பதிவு செய்தார்.

இதனையடுத்து ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ராதாரவி பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி, தன்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும். திமுகவில் இருந்து விலகி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க