• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ் மகனை அவர்களின் இடத்திலேயே தோற்கடிப்பேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

March 23, 2019 தண்டோரா குழு

துணை முதல்வரை கண்டு பயப்பட போவதில்லை என்றும் அவருடைய மகனை அவர்களின் இடத்திலேயே தோற்கடிப்பேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அதைபோல் அதிமுக சார்பில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரன் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்துள்ள ஒரு போட்டியில்,

என்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை நான் போட்டியாகவே கருதவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் அல்ல. அல்லது கிளிஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல. மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றேன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன். தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். கண்டிப்பாக போட்டியிடுவதோடு மட்டுமல்ல. மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன். காரணம் மக்கள் இன்றைக்கு மதவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிற காரணத்தால் மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான். எனவே துணை முதல்வரை கண்டு நான் பயப்பட போவதில்லை. அவர்களை அவர்களுடைய இடத்திலேயே தோற்கடிப்பேன். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு என்னுடைய பிரசாரத்தை தொடங்குவேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க