• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்

March 22, 2019 தண்டோரா குழு

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் டில்லியில் நடந்த பா.ஜ., செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் துவக்க வீராராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் பிரபலமானார் கவுதம் காம்பீர். ஐபில் தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். கவுதம் காம்பீருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் கவுதம் காம்பீர் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். அப்போது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுவதாக காம்பீர் கூறியுள்ளார்.

பின்னர், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் காம்பீர் சந்தித்தார். மேலும்,டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிட கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க