• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை – தமிழிசை

March 22, 2019 தண்டோரா குழு

தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை என்று தமிழக பஜாக தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக 40 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும் பாஜக சார்பில் தமிழிசை செளந்திரராஜனும் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்திரராஜன்,

தூத்துக்குடியில் இரண்டு பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். வலிமையான பிரசாரத்தில் பா.ஜ., ஈடுபடும். ஆக்கப்பூர்வமான அரசியலையே விரும்புகிறேன். எதிர்மறை அரசியலை விரும்பவில்லை. தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.

மக்களின் எண்ணமே எங்கள் எண்ணம். தூத்துக்குடி மக்கள் என்னை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள். தூத்துக்குடியில் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க