• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் ஆம்னி பேருந்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

March 22, 2019 தண்டோரா குழு

கோவையில் தனியார் ஆம்னி பேருந்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் அமைந்து உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை வந்த தனியார் ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் காய்கறிகளுடன், குட்கா பொருட்கள் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதனால் உடனடியாக அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது குட்காவை கொண்டு வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

150 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. ஏற்கனவே இந்த பேருந்தில் கடந்த டிசம்பர் மாதம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த நிலையில், தற்போது மீண்டும் அதே பேருந்தில் குட்கா பறிமுதல் செய்து உள்ளதால், அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க