• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகில் குறைந்த செலவில் வாழ கூடிய நகரங்கள் பட்டியலில் – சென்னை!

March 20, 2019 தண்டோரா குழு

உலக அளவில் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு சர்வதேச அளவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல் வெளியிட பட்டது இதில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.

உலக அளவில் அதிக செலவு ஆகும் நகரங்கள் மற்றும் குறைந்த செலவு ஆகும் நகரங்கள் குறித்து வருடாந்திர சர்வே ஒன்று நடத்தப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. உலகில் அதிக செலவு ஆகும் நகரங்கள் பட்டியலில் பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகரங்கள் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளன. மேலும் ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜூரிச் 4-வது இடத்தையும், ஜப்பானின் ஒசாகா நகரம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகருடன் 5-வது இடத்தைப் பகிர்ந்துள்ளது.

இந்நிலையில் குறைந்த செலவில் வசிக்க கூடிய நகரங்கள் பட்டியலில் உலகளவில் முதலிடத்தை வெனிசூலாவின் தலைநகர் கரகாஸ் பிடித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸ் இரண்டாவது இடத்தையும் உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கன்ட், கஜகஸ்தானின் அல்மாதி அடுத்தடுத்த முன்று மற்றும் நாண்காம் இடங்களைப் பிடித்துள்ளன. மற்றும் இப்பட்டியலில் பெங்களூரு நகருக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது.
மேலும் குறைந்த செலவில் வசிக்க கூடிய நகரங்கள் பட்டியலில் உலகளவில் சென்னை நகரம் அர்ஜென்டினா தலைநகர் பியூன்ஸ் அயர்சுடன் சேர்ந்து 8-வது இடத்தைப் பகிர்ந்துள்ளது மற்றும் தலைநகர் டெல்லிக்கு இப்பட்டியலில் 10-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தாண்டு செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும் இந்த நகரங்களும் குறைந்த அளவில் வாழ தகுந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க