• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு – கோவையில் சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் வேட்புமனு

March 19, 2019 தண்டோரா குழு

மக்கள் தான் எஜமானர்கள் நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

17 வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் துவங்கி விட்டன.தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கபட்டதை தொடர்ந்து இன்று முதல் வேட்பு மனுக்கள் பெறபட்டு வருகின்றன.கோவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனுவை காளபட்டி பகுதியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராசாமணியிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார்,

பண பலதிற்க்கும், ஜாதிய அரசியலுக்கு அப்பாற்பட்டு புது முயற்சியாக இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளேன். மக்கள் என்னை நம்பி ஓட்டளிப்பாளர்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு எனக் கூறியுள்ளார்.

இவரது மனைவி சசிகலா பானு வழக்கறிஞராக உள்ளார். இவரது ஒரே மகன் சரண் பிரபு தனியார் கல்லூரி படித்து வருகிறார். இரண்டாவது விண்ணப்பமாக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சி.டி.மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க