• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் போலீசாருக்கு விடுமுறை இல்லை

March 18, 2019 தண்டோரா குழு

மக்களவைத் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் போலீசாருக்கு விடுமுறை அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

17-வது நாடாளுமன்றத் தேர்தல்இந்தியா முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நேரம் என்பதால் பாதுகாப்பு கருதி மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை தொடங்கி உள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை 24 மணி நேரமும் தீவிரப்படுத்தவும் கண்காணிப்பில் ஈடுபடவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், திருவள்ளூர்,காஞ்சி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பணியாற்றும் போலீசாருக்கு, தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துக்க நிகழ்ச்சிக்காக அவசர கருதியும் மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க முடியும் அதற்கான காரணம் மற்றும் ஆவணங்கள் மூலம் மட்டுமே போலீசார் அந்த விடுமுறையை எடுக்க இயலும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க