• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

March 18, 2019 தண்டோரா குழு

2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் புதுச்சேரி என 4௦ தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்டுள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பற்றுள்ள பாஜக – 5, பாமக – 7, தேமுதிக – 4, தமாகா – 1, புதிய நீதிக்கட்சி – 1, புதிய தமிழகம் – 1, என்.ஆர்.காங்கிரஸ் – 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில், தருமபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் – வடிவேல் இராவணன், அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி, மத்திய சென்னை – சாம் பால், கடலூர் – டாக்டர். கோவிந்தசாமி, ஆகியோர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு இடண்டாம் கட்டமாக இறுதிவேட்பாளர் பாட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் திண்டுக்கல் – ஜோதிமுத்து, ஸ்ரீபெரும்புதூர் – அ.வைத்திலிங்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க