• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.சி.ஐ.டி காவல் முடிந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் திருநாவுக்கரசு

March 18, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் சி.பி.சி.ஐ.டி. காவல் நிறைவடைந்த நிலையில், அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மாவட்ட போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். இவரை இன்றுடன் நான்கு நாட்கள் வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை இவரை போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்று மாலை வரை நேரம் இருக்கும் நிலையில், காலையிலேயே அவசரம் அவசரமாக நீதிபதி குடியிருப்பில் நீதிபதி நாகராஜ் முன் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க