• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேமுதிக வேட்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்

March 18, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் தேமுதிக இணைந்தது. அக்கட்சிக்கு கள்ளக்குறிச்சி, விருதுநகர், வடசென்னை, திருச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். திருச்சி – இளங்கோவன் போட்டி, கள்ளக்குறிச்சி – எல்.கே சுதீஷ், விருதுநகர் – அழகர்சாமி போட்டி, வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க