• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவை தேர்தல் – தமிழகத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

March 15, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இ.கம்யூ.,கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ள்ளது. திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். இதனைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாற்று கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராசு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாகை தொகுதியில் போட்டியிடும் செல்வராசு நாகை பார்லி தொகுதி உறுப்பினராக ஏற்கனவே 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க