• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

March 15, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவை பொள்ளாச்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்தாக சதீஸ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். பின் இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி இடம் மாற்றப்பட்டது. தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் வெளியிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்த விளக்கமளித்த மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தவறுதலாக பெண்ணின் பெயர் வெளியாகிவிட்டதாக கூறியிருந்தார்.இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டிருந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் பயந்துபோய் புகாரளித்துவிடக்கூடாது என்பதற்காக பெயர்கள் இப்படி அப்பட்டமாக வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டு பெண்ணின் ரகசியத்தை அரசு காக்கவில்லை என கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அரசு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காகவும், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க